நாட்டின் மிகப் பெரிய மருந்து உற்பத்தி நிறுவனம் பிரதமர் மஹிந்த தலைமையில் இன்று திறந்து வைப்பு..!!

நாட்டின் மிகப் பெரிய மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஹோமாகமவின் பிட்டிபன பிரதேசத்தில் இன்று திறக்கப்பட்டது.


18.05 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இன்று திறக்கப்பட்டுள்ளது.இந்த மருந்து உற்பத்தி ஆலை மூலம் தயாரிக்கப்பட்ட மருந்துகள் ஐரோப்பிய ஒன்றிய உற்பத்தி முறைகளுக்கு ஏற்ப ஏற்றுமதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை எதிர்வரும் 3 வருட காலப்பகுதியில் நாட்டின் மருந்து தேவையில் 50% வீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.