பிரபல அரசியல்வாதிக்கு வழங்கிய கைது உத்தரவை சில மணி நேரத்தில் மீளப் பெற்ற இலங்கை நீதிமன்றம்..!!

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிரான கைது உத்தரவை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் சிறிது நேரத்திற்கு முன்பு மீளப் பெற்றுள்ளது.எனினும், உரிய திகதியில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அர்ஜுன ரணதுங்கவை கைது செய்ய உத்தரவு: நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியமைக்காக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2018 ஒக்டோபர் 28ஆம் திகதி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பான வழக்கில், முன்னாள் கொழும்பு மாநகரசபை ஆணையாளர், குலதிஸ்ஸா கீக்கியானகே உள்ளிட்ட பத்து பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, வழக்கின் முதல் சாட்சியாக பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கா நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிவியதையடுத்து, கொழும்பு தலைமை நீதவான் மொஹமட் மிஹைர், அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்ககொள்ளப்படவுள்ளதாகவும் நீதிபதி அறிவித்துள்ளார்.கடந்த 2018 ஒக்டோபர் 28 இல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவத்தின்போது, துப்பாக்கிச் சூட்டில், 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.