இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகத் திகழும் பலரும் தெரிந்திராத அதிசயக் கோபுரம்.!!(காணொளி இணைப்பு)

எழில்மிகு இலங்கை கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான அழகுகளில் பலராலும் கவரப்படட மற்றும் பல சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்த கோபுரமாக அம்புழுவாவ கோபுரம் அமைகின்றது. இந்த கோபுரமானது இலங்கையின் கம்பளை மாவட்டத்தில் அம்புழுவாவ எனும் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த கோபுரமானது அனைத்து சமய மத்திய நிலையமாகவும் உயிரியல் பல்தன்மை தொகுதியாகவும் கருதப்படுகின்றது. இந்த கோபுரம் கம்பளை மாவட்ட நில மட்டத்தில் இருந்து 1965 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கோபுரத்தின் நீளமானது சுமார் 48 மீட்டர் என்று பல வலைப்பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கோபுரமானது நாட்டின் கொரானா அசாதாரண சூழ்நிலையால், சிறிது நாட்கள் மூடப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கபட்டுள்ளனர்.அந்த வகையில் We Are Voyagers அணியினர் தமது YouTube பக்கத்தில் குறித்த கோபுரத்துக்கு செல்லும் பாதைகள்,நேரங்கள் மற்றும் செலவுகள் என்பவை உட்பட கோபுரத்தின் உச்சியை ஏறும் காட்சிகளையும் துல்லியமாக காணொளிப்படுத்தி பதிவேற்றம் செய்துள்ளனர். மேலும் அந்த காணொளியை காண கீழே உள்ள காணொளி இணைப்பில் கிளிக் செய்யவும்.