புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் ஒர் மிக முக்கிய அறிவிப்பு..!!

2010 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்முறையாக அனுமதி அட்டைகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பரீட்சை அனுமதி அட்டைகள், பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.பரீட்சை அனுமதி அட்டைகளில் பரீட்சை இலக்கம் மற்றும் விண்ணப்பதாரிக்கான பரீட்சை மத்திய நிலையம் தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்குமென கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2936 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளது.பரீட்சையில், 3,31,694 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இம்முறை பரீட்சையில் தமிழ் மொழி மூலம் 83,622 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.