கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இன்று லண்டனில் பலியான யாழ்ப்பாணத் தமிழர்..!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கச்சாய் வீதி சாகவச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட அனந்தன் சிதம்பரநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவர் லண்டன் குவீன்ஸ் பெரியில் வாழ்ந்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், 1,949,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 122,731 பேர் உயிரிழந்துள்ளனர்.பிரித்தானியாவில், கொரோனா வைரஸ் தொற்றினால் 93,873 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12,107 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.