பாடசாலை மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி… கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..!!

2020 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான விடுமுறை காலத்தை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, பாடசாலை கற்றல் நடவடிக்கைகளுக்கான இரண்டாம் தவணை காலமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.மேலும், மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த நிலையில், உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள அதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.