திடீர் மரணங்களைத் தவிர்க்க அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய 4 விடயங்கள்..!! இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்..!

இடம்பெறும் மரணங்களில் மூன்றில் இரண்டு இருதய நோய் காரணமாக ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் அகால மரணங்களை தவிர்க்க நான்கு விடயங்களை பின்பற்றி வந்தாலே போதுமெனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்றில் ஒருவர் அதிக இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர்களில் ஒருவர் அது தொடர்பான அறிவை பெற்றிருப்பதில்லையென சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.இருதய நோய்களுக்கு நான்கு விடயங்களே காரணமென இனங்காணப்பட்டுள்ளது.புகையிலைப் பாவனை, மதுபானம், ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் உணவு செயற்பாடு இன்மையே குறித்த காரணிகளாகும்.குறித்த விடயங்களை கவனத்திற்கொள்வதன் ஊடாக, இதய நோய்கள் மற்றும் மாரடைப்பால் ஏற்படும் 80 வீத அகால மரணங்களை தவிர்க்க முடியுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலக இருதய தினம் இன்றாகும். இருதய நோய்களை தோற்கடிக்க இதயங்களை பயன்படுத்துங்கள் எனும் தொனிப்பொருளில் இம்முறை இருதய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.