கிராமமொன்றில் பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்கும் விசர் நாய்..கடந்த மூன்று தினங்களில் இருவர் பலி..!!

காலி – கராப்பிட்டி பகுதியில் கடந்த மூன்று தினங்களில் இருவர் விசர் நாய் கடிக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.


இவ்வாறு உயிரிழந்தவர்களில் பதின்மூன்று வயது பள்ளி மாணவர் உட்பட இரண்டு உயிரிழந்ததாக உதுகம ஆதார மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் சுசந்தா பெர்னாண்டோ தெரிவித்தார்.இதேவேளை 7 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவியான நேத்ஸரா நாய் கடிக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தாமதிக்காமல் உடனடியாக வைத்தியசாலையை நாடினால் உயிரை காப்பாற்ற முடியும் என வைத்தியர் கூறியுள்ளார்.மேலும், குறித்த சம்பவத்தால் உயிரிழந்த இருவரின் உடல் பாகங்கள் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், அறிக்கைகள் கிடைத்த பின்னரே அதை உறுதிப்படுத்த முடியும் என்றும் கராப்பிட்டி மருத்துவமனை உதவி நீதித்துறை மருத்துவ அதிகாரி ருவான் நானாயக்கார கூறுகிறார்.