இலங்கையில் ஆபத்தான நபர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள மிக முக்கிய அறிவித்தல்..தகவல் வழங்கினால் மிகப்பெரிய பணப்பரிசு!!

இலங்கையில் செயற்படும் பாதாள உலக குழுவினரிடம் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உட்பட பாரிய ஆயுதங்கள் உள்ளதாக புலனாய்வுப் பிரிவு உறுதி செய்துள்ளது.

பிரபு கொலைகள் உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் மேற்கொள்ளும் நோக்கில் இவ்வாறான ஆயுதங்களை தம்வசம் வைத்துள்ளனர்.குறித்த ஆயுதங்களை பாதாள உலக குழுவினரால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பில் துப்பு வழங்குபவர்களுக்கு மிகப்பெரிய அளவிலான பணப்பரிசு ஒன்று வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பில் தகவல் வழங்கும் நபர்களுக்கும், பொலிஸாருக்கு உதவும் நபர்களுக்கும் வழங்கப்படும் பணப்பரிசை அதிகரிப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.