நாட்டு மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் மகிழ்ச்சி தரும் செய்தி… ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் 100 மாதிரி வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம்..!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் சுமார் 100 மாதிரி வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஊடகப் பிரதானிகளுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளுடன் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தற்போதுள்ள வீட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இந்த அடுக்குமாடி வளாகங்கள் நிர்மாணிக்கப்படும் என பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.