இலங்கையில் நேற்று மட்டும் 11 கொரோனா நோயாளிகள் அடையாளம்..!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,374 ஆக உயர்ந்துள்ளது, நேற்று 11 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமானில் இருந்து வந்த 7 பேரும், லெபனான், கத்தார் மற்றும் ஜெர்மனியில் இருந்து வந்த ஒவ்வொருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.22 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 131 நபர்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய 1,389 இலங்கையர்கள் இதுவரை கொரோனாவுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், 46 பேர் கொரோனா வைரஸ் பாதித்ததாக சந்தேகத்தின் பேரில் கண்காணிப்பில் உள்ளனர்.இதுவரை 3,230 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.