அரோகரா கோஷங்களுடன் நல்லூரிலிருந்து வெடுக்கு நாறிமலைக்கு பாதயாத்திரை மேற்கொண்டு பலரதும் கவனத்தை வெகுவாக ஈர்த்த சின்னஞ் சிறுவன்!

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் நோக்கிய புனித திருத்தல தரிசன யாத்திரை நேற்று முந்தினம் சனிக்கிழமை(26) காலை வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய முன்றலில் இலங்கை முதலுதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து அடியவர்கள் தெய்வீகப் பஜனை வழிபாட்டுடன் தமது யாத்திரையை ஆரம்பித்தனர்.யாத்திரையில் சைவசமயத்தின் அடையாளமான நந்திக் கொடிகளுடன் அடியவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சின்னம் சிறுவன் ஒருவன் நந்திக் கொடியைத் தனது பிஞ்சுக் கரங்களில் ஏந்தியவாறு நல்லை மண்ணில் நடந்து வந்த காட்சி அங்கு கூடியிருந்தோரினதும், வீதியால் சென்றவர்களினதும் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.