மேலும் யாழில் 8 பேருக்கு கொரோனா தொற்று !

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதான வைத்தியசாலையின் பணிப்பாளரும் மருத்துவருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்றைய பரிசோதனையில் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இன்று 24 பேருக்கான கொரோனா தொற்றுக்கான ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இவர்களில்14 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள்.
ஒருவர் இவர்களுக்கு உணவு வழங்கியவர். ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர். 8 பேர் முழங்காவில் பகுதி கடற்படை முகாமில் நாட்டின் வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.

(குறிப்பு: அரியாலை பகுதியில் போதகரோடு கூடிய அளவில் தொடர்புடைய 20 பேர் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரிலும் முதல் கட்டமாக April 1, மற்றும் April 3 திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.இன்று மிகுதியாக இருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.)

செய்தி :  மருத்துவர் வைத்திய கலாநிதி Thangamuthu Sathiyamoorthy