தங்கையுடன் வந்த காதலனை அடித்து உதைத்த அண்ணன்..வீட்டிற்கு வந்து நஞ்சருந்தி தற்கொலை செய்த தங்கை..!!

பொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்று வந்த பாடசாலை மாணவி ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் (26) இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, பொகவந்தலாவை டின்சின் தோட்ட பகுதியை சேர்ந்த குறித்த பாடசாலை மாணவி மேலதிக வகுப்பிற்கு சென்று வீடு திரும்பும் போது தனது காதலனுடன் வந்ததை கண்ட மாணவியின் சகோதரர் நான்கு பேரை அழைத்து வந்து காதலனை தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான காதலன் பொகவந்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.சகோதரனால் எச்சரிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவி வீட்டில் இருந்த நஞ்சு மருந்தினை எடுத்து அருத்தியுள்ளார்.பின்னர், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.தாக்குதலை மேற்கொண்ட 4 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதை அடுத்து குறித்த 4 பேரையும் நீதவான் பிணையில் விடுவித்துள்ளார்.வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மாணவியின் சடலம் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபடுமென பொலிஸார் குறிப்பிட்டனர்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.