பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்கு இராணுவத்தின் உதவியுடன் புதிய வீடு அமைத்து வழங்கிய தமிழ்க் குடும்பம்..!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மலையாளபுரம்
கிராமத்தில் வறிய நிலையில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கு,
இராணுவத்தின் ஏற்பாட்டில் புதிய வீடு ஒன்று அமைத்துக்
கொடுக்கப்பட்டுள்ளது.

திரு,திருமதி மோகன் சங்கர் குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்பில் ஒன்பதாவது விஜயபாகு படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சம்மத்
கொட்டுவேகொடவின் ஏற்பாட்டில், இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு இன்று
வீட்டு உரிமையாளரான மலையாளபுரத்தைச் சேர்ந்த சேனகன் இராஜேஸ்வரியிடம்
கையளிக்கப்பட்டுள்ளது.மீள்குடியேற்றத்தின் பின்னர் இதுவரை காலமும் தற்காலிக கொட்டில் ஒன்றில்
வசித்து வந்த குறித்த பெண்ணுக்கே, இன்று நிரந்தர வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.வீட்டினைப் பெற்றுக்கொண்ட பெண், ஏற்பாடு செய்த இராணுவத்தினருக்கும், நிதிப் பங்களிப்புச் செய்த மோகன் சங்கர் குடும்பத்தினருக்கும் தனது குடும்பம் சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டார்.