ஏப்ரல் பயங்கரவாத தாக்குதல்… முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீன் சகோதரர் சற்று முன்னர் கைது..!!

முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனின் சகோதரரான ரியாட் பதியுதீன் இன்று மாலை குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் பயங்கரவாத தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழ்நிலையிலேயே, குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.புத்தளம் பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.