தொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த உலக ஆய்வில் 2வது இடத்தைப் பிடித்தது இலங்கை..!!

சீன நிறுவனம் ஒன்று நடத்திய தொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த உலக ஆய்வில் இலங்கை 2வது இடத்தையும், சீனா முதலாவது இடத்தையும் பிடித்துள்ளது.


சீனாவின் YICAI ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய தொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த சமீபத்திய உலக ஆய்வில் இலங்கைக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.YICAI ஆராய்ச்சி நிறுவனம் ஷாங்காயை தளமாகக் கொண்ட சீனாவின் மிகப்பெரிய நிதி ஊடக நிறுவனமான Yicai மீடியா குழுமத்தின் ஒரு பகுதியாகும்.இந்நிலையில், “இலங்கை எந்தவொரு சார்பு இல்லாமல் உலகளாவிய அங்கீகாரத்திற்கு முற்றிலும் தகுதியானது.” என கொழும்பில் உள்ள சீன தூதரகம் டுவிட் செய்துள்ளது.