கண்டியில் முதலாவது கொரோனா தொற்றாளர் இனம் காணப்பட்டுள்ளார்.
அக்குறணை, தெலும்புகஹவத்தவில் வசிக்கும் ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவகிறது.
அவரது குடும்பத்தினரும் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதுதவிர, அதுலுகம, பண்டரகம, கஹவத்த பகுதிகளில் பத்து பேர் வரை இன்று தனிமைப்பட்டுள்ளனர்.தங்களது வீடுகளுக்குள் அவர்கள் தனிமைப்பட்டதாக சப்ரகமுவ மாகாண சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.