திம்புலாகல – தலுகான வானிலிருந்து விழுந்த மர்மப் பொருள்..பெரும் பீதியில் பொதுமக்கள்..!!

திம்புலாகல – தலுகான மற்றும் நாமல்போகுன பகுதிகளில் வானில் இருந்து மர்மப்பொருள் ஒன்று வீழ்ந்தமையால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த அச்சம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.தாவரங்கள் மற்றும் ஏழு மின் இணைப்புகளில் இந்த மர்மப்பொருள் பொருள் காணப்படுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.நேற்றுக் காலை முதல் மாலை வரை இந்த மர்மப்பொருள் அவ்வப்போது வானத்திலிருந்து விழுந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியில் வசிக்கும் சுல்லபந்தலகங்கார தேரர் கருத்து வெளியிட்டுகையில்,பறக்கும் தட்டுகள், விண்கற்கள் மற்றும் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான பல்வேறு கோட்பாடுகள் இப்பகுதி முழுவதும் பரவி வருவதாக தெரிவித்துள்ளார்.இந்தப் பொருள் சிலந்தி வலைகளைப் போன்றது எனவும், தொடும்போது அவை ஒட்டும் தன்மையை கொண்டுள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்நிலையில், இது என்ன என்பதை தெளிவுப்படுத்தவும், மக்களின் அச்சங்களையும், சந்தேகங்களையும் போக்குமாறும் சுல்லபந்தலகங்கார தேரர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.அத்துடன், இந்த பொருள் மனித மற்றும் விலங்குகளை மோசமாக பாதிக்குமா என்பது குறித்து விசாரணை செய்து தெளிவுப்படுத்துமாறும், அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.