நீங்கள் காதலில் வெற்றி பெற அவசியம் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..!

வாழ்க்கையில் ஒட்டுமொத்த மகிழ்ச்சி மற்றும் வெற்றிக்கு காதலில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். ஒரு மனிதனுக்கு அவர்வாழ்க்கையில் ஒட்டுமொத்த மகிழ்ச்சி மற்றும் வெற்றிக்கு காதலில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். ஒரு மனிதனுக்கு அவர் விரும்பிய படி காதல் வாழ்க்கை அமையவில்லை என்றால், வாழ்க்கையில் மன அழுத்தமும் சோகமும் தான் இருக்கும். ஜோதிடம் இதற்கு நிறைய பரிகாரங்களைச் சொல்கிறது.ஒரு சிறந்த ஜோதிட வல்லுநரை அணுகி துல்லியமான ஜாதகத்தை கணித்து வைத்திருப்பது அவசியமாகும். அப்போது தான் நமது ஜாதகத்தில் ஏதாவது தோஷம் இருக்கிறதா அல்லது உங்கள் உறவை கெடுக்கும் விதத்தில் செவ்வாய் போன்ற பாப கிரகங்களின் தாக்கம் இருக்கிறதா என்பதை கண்டறிய முடியும். உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்க முறையான பரிகாரங்கள் செய்ய வேண்டியது அவசியம்.

நீங்கள் பெண்ணாக இருந்தால் 16 திங்கட்கிழமைகள் விரதம் இருக்க வேண்டும். இது சோம வார விரதம் இருப்பது, சிவ வழிபாடு செய்வதும் பிரசித்தி பெற்றதாக அறியப்படுகிறது. இதை பக்தியுடன் அனுசரித்தால் நீங்கள் விரும்பிய கணவர் கிடைப்பார் என்று நம்பப்படுகிறது.சிவன் கோவிலில் சிவ பெருமானுக்கு தேனுடன் அபிஷேகம் செய்யுங்கள். இந்த விரதத்தை கடைப்பிடித்த சில நாட்களிலேயே விரைவில் விரும்பியவர் கணவராக கிடைப்பார்.பௌர்ணமி நாளில் காதலர்கள் சந்தித்தால் அந்த உறவு மேன்மேலும் பலப்படும் என்று நம்பப்படுகிறது.நீங்கள் விரும்பும் நபரை வசியம் செய்ய விரும்பினால் நீங்கள் வைரம் பதித்த நகைகள் அல்லது வைரத்தைப் போன்ற கோமேதகம் அல்லது மாணிக்கக்கல் போன்ற இரத்தினக் கற்களை அணிய வேண்டும்.ருத்ராட்சம் அணியுங்கள். ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி ஏற்கனவே பிரபலமாக எல்லோரும் அறிவார்கள். இருந்தாலும் கௌரி சங்கர ருத்ராட்சம் எனப்படும் ருத்ராட்சத்தை அணிந்தால் நீங்கள் விரும்பிய நபரின் காதலை பெறலாம்.நீங்கள் யாருடனாவது உறவில் இணைய விரும்பினால், கருப்பு நிறத்தில் இருக்கும் எந்த பொருளையும் பரிசாகக் கொடுக்காதீர்கள். ஏனென்றால் கருப்பு அமங்கலமான நிறமாகக் கருதப்படுகிறது.சிறந்த வாழ்க்கைத் துணைவரை கண்டறிய துர்க்கைக்கு சிகப்பு நிற ஆடை அணிவிக்க வேண்டும்.துர்க்கை துதி பாட வேண்டும். இது உங்கள் காதலரை வாழ்க்கைக்கு கண்டறிய பெருமளவில் உதவும்.நீங்கள் மிகவும் விரும்பும் மனிதரின் இதயத்தில் இடம்பிடிக்க வேண்டுமென்றால், அருகாமையில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு புல்லாங்குழல் வாங்கிக் கொடுக்க வேண்டும்.மற்றொரு பரிகாரமும் இருக்கிறது. ஒரு வெற்றிலையை எடுத்துக் கொண்டு அதில் நீங்கள் மிகவும் நேசிக்கும் மனிதரின் பெயரை எழுத வேண்டும். பிறகு அந்த வெற்றிலையை தேன் நிறைந்த ஜாடியில் நனைத்து எடுக்க வேண்டும். இந்த பரிகாரம் நீங்கள் விரும்பும் நபரோடு நெருக்கத்தை அதிகரிக்கும்.உங்கள் காதலரின் பெயரைச் சொல்லி உங்கள் வீட்டின் தென் மேற்கு மூலையில் ஒரு தீபம் ஏற்றுங்கள் அல்லது அகல் விளக்கை ஏற்றுங்கள்.அதேபோல கத்தி, போன்ற கூர்மையான பொருட்களையும் யாருக்கும் ஒருபோதும் பரிசாகக் கொடுக்காதீர்கள். இதுபோன்ற பொருட்களை பரிசளிப்பதால் உங்கள் காகாதலில் தலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் உங்கள் முறிவு கூட ஏற்படலாம்.