பட்டதாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கியுள்ள உறுதிமொழி..

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு விரைவில் பாடசாலைகளில் நியமனங்களை வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் பதுளை மாவட்டத்திற்குச் விஜயம் செய்து பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைப் பற்றி கேட்டறிந்த பின்னரே இவ்வாறு உறுதியளித்துள்ளார்.மேலும் இதன்போது, பின் தங்கிய பகுதிகளுக்கு உட்கட்டமைப்பு மேம்பாடுகளை வழங்கவும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு புதிய வீடுகள் வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இதன்போது, ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் மற்றும் ஊவா மாகாண ஆளுநர் முஸ்ஸமில் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.