சாதாரண தரப் பரீட்சையில் 9பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்ற மாணவன் கொடூரமாகப் படுகொலை.?? தீவிர விசாரணையில் பொலிஸார்..!

அம்பலங்கொட பிரதான பாடசாலையில் 12ஆம் தரம் கல்வி கற்கும் மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.பலபிட்டிய, ஹரஸ்பொல கடற்கரையில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அஹுன்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலங்கொட தர்மாஷோக வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பானு சரித் டி சொய்ஸா என்ற 19 வயதுடைய மாணவனின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.இந்த மாணவன் கடந்த வருடம் சாதாரண பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று விஞ்ஞான பிரிவில் உயர்தரம் கற்பதற்கு தயாராகவிருந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். பெற்றோர் இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.