பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மரணம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் வெளியிட்ட பதிவு!!

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதாவது,

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை ஒரு நாள் கொழும்பில் வைத்து தான் நேரில் சந்தித்ததாகவும் அவர் ஒரு சிறந்த குணம் கொண்ட நபர் எனவும் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், இவரது இழப்பு பல மில்லியன் மக்களுக்கான ஓர் சோகச்செய்தியாக அமையும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை கம்பன் விழாவில் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்துடன் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார ஆகிய இருவரும் நேரில் கலந்து கொண்டு விருதுகள் பெற்றிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.