பொலிஸாரின் கடுமையான நிபந்தனைகளுடன் உண்ணாவிரத திடலில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்..!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.


தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை போராட்ட இடத்தில் கண்காணிப்புக் கடமையிலிருக்கும் பொலிஸார், மாணவர்களை போராட்ட இடத்துக்கு அனுமதியளிக்க மறுத்த நிலையில், மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா பொலிஸாருக்கு விடயத்தை எடுத்துக் கூறியதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதும் வல்வெட்டித்துறை பொலிஸாரால் நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டது.இந்த நிலையிலேயே குறித்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகிறது.