பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் கண்ணீர்கடலுக்கு மத்தியில் விடைபெற்றார் பாடகர் எஸ்.பி.பி..!! 72 பீரங்கிக் குண்டுகள் முழங்க அஞ்சலி.!!

தென்னிந்திய பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் பொலிஸாரின் மரியாதையுடன் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த பாடகர் பாலசுப்ரமணியம் நேற்றையதினம் மதியம் உயிரிழந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றிலிருந்து திரையுலக பிரபலங்கள் பொதுமக்கள் என பலர் இதுவரையில் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் சற்றுமுன்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார் எஸ்.பி.பி..