வீடு வீடாகச் சென்று பொதுமக்களின் குறைகளை விசாரித்த ஜனாதிபதி கோட்டாபய!

வீடு வீடாகச் சென்று மக்களின் குறை நிறைகளை விசாரிக்கும் நடவடிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார்.அதற்கமைய இன்று பதுளை, ஹல்துமுல்ல, வெலங்விட கிராமத்திற்கு ஜனாதிபதி சென்றிருந்தார்.

மிக எளிமையாகச் சென்ற ஜனாதிபதி அங்கு வாழும் மக்களின் தேவைகள் மற்றும் குறைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.அத்துடன் அந்த மக்களின் வீடுகள் மற்றும் விவசாயத்தையும் ஜனாதிபதி கண்காணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.