இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் ஏற்பட்டதன் விளைவாக மக்கள் பலரும் பசியால் வாடுவதுடன் மிகவும் மிகுந்த நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.இதனால் இன்று பலரும் உதவிகளுக்காக கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளமை மிகவும் வேதனைக்குரியது.
பிரதேச செயலாளர் என்றால் டை கட்டிக் கொண்டு தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு ஓடர் கொடுப்பவர்கள் என்ற மனப்பதிவை எம்மிடம் இருந்து மாற்றியவர் இவர்.தானாகவே தகனது அலுவலகத்தை சுத்தம் செய்வது, அலுவலகத்துக்குவரும் அத்தியவசியப் பொருட்களை வாகனங்களில் இருந்து இறக்குவது, இரவு முழுவதும் விழித்திருந்து வேலை செய்வது, இப்படி, இந்த நாட்களில் தனது பதவிக்குரிய கடமைகளைத் தாண்டி மக்களோடு மக்களாக நின்று, தனது கடமைகளை சிறப்புற செய்து வருகின்றார். இதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவிக்கும் அதே வேளை, இவரின் சிறப்பான செயற்பாடு மக்கள் மத்தியில் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் வீதியில் இறங்காமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்க ,அரசாங்கத்திடம் சம்பளம் பெறும் ஓர் அரச உயர் அதிகாரி தனது கடமைகளையும் தாண்டி இவ்வாறு மக்கள் பணி செய்வது, அதுவும் இந்தக்காலத்தில் வியந்து பார்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல போற்றிப் புகழப் பட வேண்டியதும் கூட.