இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் பலர் குணமடைவு..!!

இலங்கையில் மேலும் 16பேர், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து, பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,158 ஆக அதிகரித்துள்ளது.இலங்கையில் இதுவரை 3,333பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்களுள் 162பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 13பேர் உயிரிழந்துள்ளனர்.இதேவேளை, இலங்கையில் இதுவரை நடத்தப்பட்ட பி.சி.ஆர்.சோதனைகளின் எண்ணிக்கை, 275,590யை கடந்துள்ளதாக கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் தேசிய மையம் தெரிவித்துள்ளது.நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் 1612 பி.சி.ஆர்.சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை என விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.