எஸ்பிபி மரணத்துக்கு காரணம் என்ன? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் இன்று நண்பகல் 1.04 மணியளவில் காலமானார், அவருக்கு வயது 74.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு MGM Healthcare மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரின் உடல்நிலை கடந்த மாதம் 13ம் தேதி மோசமான நிலையில் உயிர் காக்கும் கருவிகளுடன் மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்து வந்தனர்.

தீவிர கண்காணிப்பின் விளைவாக உடல்நலம் தேறி வந்தார் எஸ்பிபி, பிசியோதெரபியும் அவருக்கு அளிக்கப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

உயிர்காக்கும் கருவிகளின் மூலம் சிகிச்சை தொடர்ந்தாலும் முன்னேற்றம் ஏதும் ஏற்படாத நிலையில், இன்று காலமானார்.

கொரோனா தொற்றிலிருந்து மீண்டாலும் அவரது மரணத்துக்கு Cardio Respitary Arrest காரணம் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.