எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் தடை..!!

பிளாஸ்டிக் பொருட்களினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் நோக்கம் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் தடை தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

அந்த வகையில் கொட்டன் பட்டுக்காக (Cotton Bud) பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிலான சிறிய குழாய், ஷெஷே பக்கெட்கள் மற்றும் கிருமிநாசினி அடங்கிய சிறிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக தெரியவருகிறது.எனினும், இதற்கான மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.என்ற போதும் கொட்டன் பட்டை, சுகாதார நடவடிக்கைகளுக்காக மாத்திரம் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.