மீன் லொறியில் கடத்தப்பட்ட பெரும் தொகை கஞ்சா.!! பாரிய கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!

மன்னார் – மடுப் பகுதியில் ஒருதொகை கேரளக் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மீன் லொறியொன்றில் மறைத்து வைத்து கொண்டு சென்ற நிலையிலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து 103 கிலோகிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.இந்தநிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணகளை முன்னெடுத்து வருகின்றனர்.