கொரோனாவால் வந்த பசிக் கொடுமை..வீடு வீடாகச் சென்று உதவிய மாபியாக் கும்பல்

கொரோனாவால் வறுமையில் வாடும் மக்களுக்கு மாபியா கும்பலொன்று வீடு வீடாக சென்று உணவு வழங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் கொரோனா கோரத்தாண்டம் ஆடிய நிலையில் அதன் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்த வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஊரடங்கு உத்தரவால் லட்சக்கணக்கான மக்கள் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக தென் பிராந்தியங்களான கம்பானியா, கலப்ரியா, சிசிலி, புக்லியா ஆகியவற்றில் ஏழைகள் அதிகம். இவர்களில் பெரும்பாலானோர் அன்றாட கூலித் தொழிலாளர்கள் ஆவர்.இந்நிலையில், இவர்களுக்கு உதவும் வண்ணம் மாபியா கும்பலை சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று பாஸ்தா, பால், மாவு, மற்றும் குடிநீரை விநியோகித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி அவர்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி கடைக்காரர்களை மிரட்டியும் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய வைக்கின்றனர்.இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்த விரிவான விசாரணைக்கு உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.இதைக் கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் கொள்ளை கும்பலை ஏதும் செய்ய இயலாத நிலைக்கு ஆளாகக்கூடுமென சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.