தேயிலைத் தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு..!! பெரும் அச்சத்தில் தொழிலாளர்கள்..!!

தேயிலை மலையில் கொழுந்து பறிக்கும் பெண் தொழிலாளியின் அருகே 13 அடி நீளமான மலைப்பாம்பொன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொப்டன் தோட்ட பழைய ஸ்டோர் பிரிவில் 13 அடி நீளமும் 36 கிலோ எடைகொண்ட மலைப்பாம்பொன்றையே நேற்று (23) பிடித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,ஹொப்டன் தோட்ட பழைய ஸ்டோர் பிரிவிலுள்ள தேயிலை மலையொன்றில் கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளி அருகே வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது.இதை உணர்ந்த அவர், அருகில் சென்று அவதானித்த போது மலைப்பாம்பொன்று இருப்பதை கண்டு உடனடியாக சக தொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.விரைந்து செயற்பட்ட தொழிலாளர்கள் மலைப்பாம்பை பிடித்து லுணுகலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.லுணுகலை பொலிஸார் பாம்பை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.