ரயிலுடன் மோதி பாடசாலை வான் கோர விபத்து.!! தெய்வாதீனமாக உயிர்தப்பிய மாணவர்கள்..!!

கட்டுநாயக்க பிரதேசத்தில் பாடசாலை வான் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து கட்டுநாயக்க சரத் மாவத்தையில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவை வீதியில் இடம்பெற்றுள்ளது.இதில் கொழும்பு – சிலாபம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.எவ்வாறாயினும், சம்பவத்தில் எந்தவொரு உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.வானில் பயணித்த 17 மாணவர்களும் அதன் சாரதியும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தள்ளனர்.