தமிழ் தேசியக் கட்சிகளின் அடுத்தக்கட்ட நடவடிக்கை..நாளைய நீதின்றத் தீர்ப்பின் பின்னர் முடிவு!!

தமிழ் தேசியக் கட்சிகளின் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக நாளைய தினம் முடிவு அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) மாலை கூடிய தமிழ் தேசிய அணிகள் தியாக தீபம் திலீபனின் நினைகூரல் தொடர்பாக கலந்துரையாடியிருந்தன.இதன்போது, நாளைய தினம் தியாக தீபம் திலீபனின் நினைகூரல் தொடர்பான நீதிமன்றக் கட்டளை பிறப்பிக்கப்படவுள்ள நிலையில் அந்தக் கட்டளையின் பின்னர் கட்சிகள் மீண்டும் கூடுவதற்கு தீர்மானித்துள்ளன.இவ்வாறு நாளையதினம் கூடுகின்றபோது, அடுத்தக்கட்ட நடவடிக்கை என்வென்பது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டு அதன்பின்னர் ஊடகங்கள் மூலமாக பகிரங்கப்படுத்தப்படுமென கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.