யாழ் தங்கப் பிரியர்களுக்கு ஓர் முக்கிய செய்தி… யாழ் நகரில் சரிவடைவந்து செல்லும் விலை..!!

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று புதன்கிழமை தங்கத்தின் விலை 500 ரூபாவால் குறைவடைந்துள்ளது. கடந்த இரண்டு நாள்களில் தங்கத்தின் விலை 2 ஆயிரம் ரூபாவால் சரிவடைந்துள்ளது.

தங்கம் இறக்குமதி மீதான வரி 15 சதவீதம் முழுமையாக நீக்கப்படுவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, கடந்த7ஆம் திகதி அறிவித்த நிலையில் தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாயால் குறைக்கப்படும் என எதிபார்க்கப்பட்டது. எனினும், இறக்குமதி மீதான வரி நீக்கத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலையை படிப்படியாகவே முடியும் என தங்கம் இறக்குமதியாளர்கள் தெரிவித்திருந்தனர்.யாழ்ப்பாணத்தில் இன்று (செப்ரெம்பர் 23) புதன்கிழமை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை 91 ஆயிரத்து 200 ரூபாயாக குறைவந்துள்ளது. கடந்த நேற்று ஒரு பவுண் ஆபரணத் தங்கம் 91 ஆயிரத்து 700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.தூய தங்கத்தின் விலை:24 கரட் தூய தங்கம் இன்று பவுண் ஒன்று 99 ஆயிரத்து 500 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது. நேற்று 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுண் 99 ஆயிரத்து 500 ரூபாவாககக் காணப்பட்டது.