நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு..!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த இருவரும் அமெரிக்காவில் இருந்த நாடு திரும்பியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வைரஸ் தொதற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 315ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 11 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், மொத்தமாக மூவாயிரத்து 129 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.மேலும், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 173 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், இலங்கையில் கொரோனாவினால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.இதேவேளை, வைரஸ் தொற்று சந்தேகத்தில் 52 பேர் தொடர்ந்து வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.