பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

நாட்டிலுள்ள தேசியப் பாடசாலைகளில் இடை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பது மீள் அறிவித்தல் வரை இடை நிறுத்தப்படுவதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இம்முறை கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.இந்த பரீட்சைக்காக நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,648 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.அதேநேரம் 2020 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.