கொரோனாவிற்கு பிரித்தானியாவில் மேலுமொரு இலங்கையர் பரிதாபமாகப் பலி..!

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலுமொரு இலங்கையர் இங்கிலாந்தில் உயிரிழந்துள்ளார்.

லண்டனின் ஃபெல்டாமில் வசிக்கும் 55 வயதான இலங்கையரே உயிரிழந்ததாக, இங்கிலாந்திற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. அவர் மகரகம, வட்டகெதரவை சேர்ந்தவர்.ஏற்கனவே, சுவிற்சர்லாந்தில் வசித்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்ததாக இலங்கை அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.