இலங்கை அரசாங்கத்தின் திடீர்த் தீர்மானம்! ரத்துச் செய்யப்பட்டுள்ள வர்த்தமானி..!

அரசாங்கத்தால் கடந்த 10 ஆம் திகதி வெளியிட்ட 2192/36 இலக்க வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித உறுதிப்பத்திர ஆவணங்களும் இன்றி, அரச காணிகளில் குடியிருப்போர் அல்லது அக்காணியை அபிவிருத்தி செய்த நபர்களுக்கு அவற்றின் சட்ட ரீதியான உரிமையை வழங்குவதற்காக வெளியிட்ட வர்த்தமானியே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.வனப் பாதுகாப்பு, சரணாலயங்கள் உட்பட அரச காணிகளை அனுமதியின்றி பயன்படுத்தி வரும் நபர்களுக்கு அவற்றை வழங்குவதற்காக அரசாங்கம் இந்த வர்த்தமானியை வெளியிடிருந்தது.

இருப்பினும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் உட்பட பல தரப்பினர் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்த நிலையில், குறித்த வர்த்தமானி அறிவித்தலை 12 நாட்களுக்குள் அரசாங்கம் இரத்துச் செய்துள்ளது.இதேவேளை அண்மையில் வெளியிடப்பட்ட சாய்ந்தமருது நகர சபையை உருவாக்கும் வர்த்தமானி அறிவித்தல் போன்ற சில வர்த்தமானி அறிவித்தல்கள் இவ்வாறு குறுகிய காலத்திற்குள் இரத்துச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.