மீண்டும் களைகட்டிய ஐ.பி.எல்.! சென்னையை பந்தாடிய ராஜஸ்தான்.!! 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

சென்னை மற்றும் ராஜஸ்தான் இடையிலான ஐபிஎல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. முதல் மூன்று ஐபிஎல் போட்டிகள் எவ்வளவு விறுவிறுப்பாக இருந்ததோ, அதை விட அதிக மடங்கு விறுவிறுப்பாக இன்றைய போட்டி இருந்தது. முதலில் இறங்கிய ராஜஸ்தான் 7 விக்கெட்டை இழந்து 20 ஓவரில் 216 ரன்கள் எடுத்தது. இதில் சென்னையின் பவுலிங்கை ராஜஸ்தான் துவம்சம் செய்தது.அதிலும், முக்கியமாக சஞ்சு சாம்சன் சிக்ஸர் மழையை பொழிய விட்டு 74(32) 9 சிக்ஸ்ர் 1 போர் என அடித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில், ஸ்டீவ் ஸ்மித் 69(47) 4 சிக்ஸர் 4 போர் அடிக்க இறுதியில் ஆர்சார் 4 சிக்ஸ்ர் அடித்து 216 ரன்கள் என நிர்ணயம் செய்தார்.

அதன்பின் இறங்கிய சென்னை அணி முதலில் நிதானமாக ஆடியது . ஒரு ஓவருக்கு 7-8 ரன்கள் எடுத்தால் போதும் என்று ஆடினார்கள்.வாட்சன் மற்றும் முரளி விஜய் இருவரும் நிதானம் காட்டினார்கள். ஆனால் போக போக வாட்சன் பார்ம் பெற்று, வேகமாக ஆட தொடங்கினார்.அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டார்.4 சிக்ஸர், ஒரு பவுண்டரி என்று அதிரடி காட்டினார். அதேபோல் இன்னொரு பக்கம் அதிசயமாக முரளி விஜயும் கொஞ்சம் கொஞ்சமாக பவுண்டரிகளை அடுத்து களத்தில் நிற்க தொடங்கினார்.ஆனால், அப்போதுதான் சென்னை அணிக்கு ஷாக் கொடுக்க களத்திற்கு வந்தார் ராகுல் திவாதியா. 7வது ஓவரின் 4வது பந்தில் அவர் வாட்சனின் விக்கெட்டை எடுத்தார்.அந்த விக்கெட்தான் சென்னை அணிக்கு முதல் சரிவாக அமைந்தது. ஆனால் அதன்பின்பும் சென்னை அணிக்கு ஷாக் கொடுக்க காத்து இருந்தார் ராகுல் திவாதியா.ஆம், மீண்டும் 9வது ஓவரை வீச வந்தார் ராகுல் திவாதியா. சென்னை அணி இந்த முறை சாம் கரனை முன்பே களத்தில் இறக்கி டெஸ்ட் செய்தது.ஆனால் சென்னை அணியின் கனவை ராகுல் திவாதியா உடைத்து நொறுக்கினார். அடுத்தடுத்து 9வது ஓவரின் 5 மற்றும் 6வது பந்தில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். அதிகம் நம்பிக்கை அளித்த சாம் கரன் விக்கெட்டை ராகுல் திவாதியா வீழ்த்தினார்.அடுத்த பந்திலேயே புதிய வீரர் ரூத்துராஜ் விக்கெட்டையும் வீழ்த்தினார்.இதனால், சென்னை அணி நிலைகுலைந்தது. அப்போதே சென்னை அணியின் தோல்வி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
அதன்பின் களமிறங்கிய ஜாதவும் நீண்ட நேரம் நிலைத்து ஆடவில்லை. டு பிளசிஸ் மட்டுமே ஒரு பக்கம் உயிரை கொடுத்து ஆடிக்கொண்டு இருந்தார். இறுதியில் 72 ரன்கள் அடித்து 7 சிக்ஸ்ருடன் ஆட்டமிழக்க, ரசிகர்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக தோனி இறுதி ஓவரி 3 சிக்ஸர் அடித்தார்.இதையடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றியை பெற்றுகொண்டாடியுள்ளது.