வடமாகாண புதிய டி.ஐ.ஜி கடமைகளைப் பொறுப்பேற்பு..!

வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சஞ்சீவ தர்ம ரட்ண இன்று காங்கேசன்துறையில் உள்ள அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அண்மையில் ஓய்வு பெற்ற நிலையில் வடக்கு மாகாணத்திற்கான புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக சஞ்சீவ தர்ம ரட்ண இலங்கை பொலிஸ் திணைக்களத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் பொறுப்பேற்றுக்கொண்டார்.