நாட்டு மக்களுக்கு முக்கிய செய்தி.. சலுகை விலையில் தேங்காய் விற்பனை..!!

நாட்டில் தேங்காயின் விலை அதிகரித்துள்ள நிலையில் புதிய நுட்பத்தில் தேங்காய்களை சலுகை விலையில் விற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பெருந்தோட்டத் துறை அமைச்சினால் இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு உள்ளிட்ட ஏனைய சில பகுதிகளில் தேய்காய்களை பாராவூர்திகள் மூலம் சலுகை விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன்போது தேங்காய் ஒன்று அதிகபட்ச விலையாக 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.