நான் இறந்து விடவில்லை….வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜிபி சிலை மனிதர்..!!

கொரோனா வைரசால் தான் இறந்து விட்டதாக வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜிபி சிலை மனிதர்.

விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் கடந்த 30 ஆண்டுகளாக சிலை மனிதராக பணிபுரிந்து வரும் நபர் கொரோனா வைரஸால் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.இத்தகவல் காட்டுத்தீயாய் பரவவே, பலரும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் தான் இறக்கவில்லை என்றும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவரே வீடியோவை வெளியிட்டுள்ளார்.மேலும், விஜிபி திறக்கப்படும் போது, மீண்டும் தன்னை அங்கு காணலாம் எனவும் தெரிவித்துள்ளார்.