தமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று..!!

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி தரவுகள் அடங்கிய அறிக்கையினை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி மாநிலத்தில் புதிதாக 5,337 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,52,674 ஆக உயர்ந்துள்ளது.அதில் சென்னையில் மட்டும் புதிதாக 989 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும், 76 பேர்உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,947 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 5,406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் இதுவரை மொத்தம் 4,97,377 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.