கொரோனா தொற்றிலிருந்து மேலும் 18 பேர் பூரண குணமடைவு..!!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 18 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 118 ஆக அதிகரித்துள்ளது.மேலும், தொற்று உறுதியானவர்களில் 168 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு கொரோனா தொற்று சந்தேகத்தில் 38 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.இலங்கையில் இதுவரை 3 ஆயிரத்து 299 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.