ஊரடங்கு வேளையில் பொலிஸாரின் உத்தரவினையும் மீறி யாழின் சில பகுதிகளில் புத்தாண்டு வழிபாடுகளில் ஈடுபடும் பொதுமக்கள்!!

புதுவருட தினமான இன்று(செவ்வாய்கிழமை) கோவில்கள், பொது இடங்களில் கூடுவதை தவிா்க்குமாறு பொலிஸாா் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்து வருகின்றனர்.இந்தநிலையில் யாழ்.நகா் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் கோவில்கள் பூட்டப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. இன்றைய தினம் காலை நல்லுாா் கந்தசுவாமி ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில் மக்கள் வழிபாடுகளை நடாத்த முயற்சித்தனா்.எனினும் கோவில் வளாகத்திற்குள் நுழைய நிா்வாகம் தடைவித்திருந்தமையால் வீதிகளில் நின்று மக்கள் வழிபாடுகளை நடாத்தியிருந்தனா். இதேவேளை யாழ்.நகா் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் பொலிஸாா் ஒலிபெருக்கிகள் ஊடாக புதுவருடத்தை அமைதியானமுறையில் வீடுகளில் இருந்தே கொண்டாடுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.