தென்னாபிரிக்க இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றிய கிளிநொச்சி வாசி தற்கொலை!

தென்னாபிரிக்காவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பணிபுரிந்த இலங்கைத் தமிழர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) அவர் உயிரிழந்ததாக வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் கிளிநொச்சியை சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் இறந்தவரின் உடலை இலங்கைக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அட்மிரல் கொலம்பேஜ் மேலும் தெரிவித்தார்.