கடலில் மிதந்து வந்த ஹெரோயின் போதைப்பொருள்…!

கடலில் மிதந்து வந்த சுமார் ஒரு கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை சின்னப்பாடு கரையோரத்தில் வைத்து தாம் கைப்பற்றியதாக உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிகவும் பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டிருந்த இந்த ஹெரோயின் போதைப்பொருள் கடலில் மிதந்து வந்து சின்னப்பாடு கடற்கரையில் கரையொதிங்கியுள்ளது.இதனைக் கண்ட மீனவர் ஒருவர் அது குறித்து உடப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.பிரவுன் சுகர் ரக ஹெரோயின் போதைப்பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டிருந்தாலும் ஹெரோயின் போதைப்பொருளில் கடல் நீர் புகுந்துள்ளதாகவும் இதனால், அதன் பெறுமதியை கணக்கிட முடியாதுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.