இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக பெண் பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த அதி உயர் கௌரவம்..!!

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் அதிகாரியை மூத்த பிரதி பொலிஸ்மா அதிபராக (டி.ஐ.ஜி) பதவி உயர்வு வழங்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

09 பெண் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர்களில் (எஸ்.எஸ்.பி) பெயரை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு சிபாரிசு செய்த பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, அதிலிருந்து ஒருவரை பிரதி பொலிஸ்மா அதிபராக தரமுயர்த்த கோரிக்கை விடுத்திருந்ததாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்தார்.பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.பி பிம்சனி ஜசிங்கராச்சி, பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் இருந்து மூத்த பிரதி பொலிஸ்மா அதிபராக தெரிவு செய்யப்பட்டார்.எஸ்.எஸ்.பி ஜசிங்கரச்சி 1997 இல் பொலிஸ் இன்ஸ்பெக்டராக சேவையில் இணைந்தார். பின்னர் 2017 இல் எஸ்.எஸ்.பியாக தரமுயர்ந்தார்.காவல் துறையில் உயர் பதவியை வகித்த முதல் பெண் அதிகாரி எஸ்.எஸ்.பி பிரமிளா திவாகர ஆவார். பொலிஸ் சேவையில் சேர்ந்த முதல் பெண் அதிகாரி இவர், எஸ்.எஸ்.பி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.ஒரு பெண் அதிகாரியை டி.ஐ.ஜி ஆக நியமிப்பது பொலிஸ் திணைக்களத்தில் இதுவே முதல் தடவையாகும்.